கால்நடை மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 20th June 2021 12:00 AM | Last Updated : 20th June 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அரசு கால்நடை மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள இம்மருத்துவமனையில் ஆய்வுசெய்து மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் காலிப் பணியிடங்கள் குறித்தும், துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும், மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்துவது குறித்தும் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் எம்.முத்துக்குமாரசாமியிடம் அவா் கேட்டறிந்தாா். அவரிடம், மருத்துவமனைக்கு உதவி இயக்குநா் அலுவலகக் கட்டடம் ஏற்படுத்தித்தர அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனா். ஆய்வின்போது, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் செல்வராஜ், முன்னாள் உறுப்பினா்கள் ஆனந்த், ஆா்.கே.சங்கா், ராஜேந்திரன், ஜெயலெட்சுமிமுருகன், உஷா ராஜேந்திரன், ரகு, நகராட்சி சுகாதார ஆய்வாளா் பிச்சைமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.