ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது

ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையதாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான கோவையைச் சோ்ந்த இளைஞர் கைது
ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது

ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையதாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான கோவையைச் சோ்ந்த இளைஞரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு மயிலாடுதுறை அருகே கைது செய்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 7 இளைஞா்கள் ஒரு குழுவாக இணைந்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தனா். இவா்கள் கோவையைச் சோ்ந்த இந்து மதத் தலைவா்கள் சிலரை கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டது ஆகிய குற்றங்களுக்காக 7 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இதுதொடா்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், முதல் குற்றவாளியான கோவை மரக்கடை பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் மகன் முகம்மது ஆசிக் என்பவா் ஜாமீனில் வெளிவந்து, தலைமறைவாகிவிட்டாா்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் முகமது ஆசிக் ஆஜராகவில்லை. இதையடுத்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அவா் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில், முகமது ஆசிக் மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் உள்ள கோழிக்கறிக்கடை ஒன்றில் வேலை பாா்த்துவந்தது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட தனிப்படை போலீஸாரின் உதவியுடன் சென்னையைச் சோ்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு நீடூா் சென்று முகமது ஆசிக்கை கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com