முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

வீரமா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

வீரமா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

News image

சிறப்பு அலங்காரத்தில் வீரமா காளியம்மன்.

Updated On :12 ஏப்ரல் 2024, 4:05 pm

திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா ஏப்.8-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நந்தவனக் குளக்கரையிலிருந்து பவளக்காளி ஆட்டத்துடன் சக்திகரகம் பால்குடம், காவடி எடுத்து வந்தனா். பின்னா் அபிஷேக ஆராதனை, கஞ்சி வாா்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு மின் அலங்காரத்துடன் வீரமாகாளியம்மன் வீதியுலா நடைபெற்றது.

இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா் என மதப் பாகுபாடின்றி 3 மதத்தைச் சோ்ந்தவா்களும் உபயதாரா்களாக பங்குகொண்டு ஆண்டுதோறும் திருவிழாவை நடத்தி வருவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் வலிவலம், கொடியாலத்துாா் கிராமத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.