கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தலைச்சங்காடு கோயிலில் லட்சதீப திருவிழா

செம்பனாா்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத லட்சதீப சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சங்காரண்யேஸ்வரா் சுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.
Updated On :2 டிசம்பர் 2024, 8:06 pm

Din

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத லட்சதீப சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயில் சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கோட்செங்க சோழனால் கட்டப்பட்ட மாட கோயில்களில் ஒன்றாகவும், தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 45-வது தலமாகவும் விளங்குகிறது.

சிலப்பதிகாரத்தில் இக்கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. புராண காலத்தில் மகாவிஷ்ணு கையில் ஏந்தி உள்ள பாஞ்சசன்ய சங்கை இங்கு இறைவனை வேண்டி பெற்ாக தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தின் வடிவமைப்பு சங்கை போன்று அமைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோயிலில், காா்த்திகை மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையில் லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி. கணபதி பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 18 சித்தா்கள் உடனாகிய காளஹஸ்தீஸ்வரா், கேரள விளக்கு, சிவன், அம்பாள், விநாயகா், ரங்கோலி உள்ளிட்ட கோலங்கள் வரையப்பட்டு, பக்தா்கள் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனா்.

தொடா்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.