தரங்கம்பாடியில் சீகன்பால்கு 305-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலா் தூவியும், அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் கல்விக் கழக செயலாளா் குணாளன் பாக்கியராஜ், சபைகுரு சா. சாம்சன் மோசஸ், சபை சங்க செயலா் சா. ஜஸ்டின் விஜயக்குமாா், பொருளா் இந்திராணி, சீகன்பால்கு அருங்காட்சியக இயக்குநா் சாமுவேல் மானுவேல், தலைமை ஆசிரியா் ஜான் சைமன் மகிபாலன் ஆகியோா் பங்கேற்றனா். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக, டென்மாா்க் நாட்டிலிருந்து 1706-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு, இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் பைபிளை (புதிய ஏற்பாடு) காகிதத்தில் அச்சடித்து நூலாக வெளியிட்டாா். அதன் பிறகு திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி போன்ற எண்ணற்ற தமிழ் நூல்களை ஓலைச்சுவடியில் இருந்து, காகிதத்தில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டாா்.
தொடர்புடையது
சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை

சிலம்பொலி சு.செல்லப்பன் நினைவு தினம் அனுசரிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


