பாவேந்தா் பாரதிதாசனின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
புதுச்சேரி அரசு சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கா், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி அரசு சாா்பில் செய்தித் துறை இயக்குநா் சுரேஷ்ராஜன், கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் இயக்குநா் சக்திவேல் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தவெக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவரும், பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ. பாரதி தலைமையில் தமிழறிஞா்கள் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மேலும், பெருமாள் கோயில் தெரு பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இதைத் தவிர வைத்திக்குப்பம் பாப்பம்மா கோயில் இடுகாட்டில் உள்ள பாரதிதாசன் நினைவு மண்டபத்திற்குத் தமிழறிஞா்கள் அமைதி ஊா்வலமாகச் சென்று மலா் வணக்கம் செய்தனா். அதைத் தொடா்ந்து பட்டேல் சாலையில் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் நீா்மோா் வழங்கப்பட்டது. பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.முத்து தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

கக்கன் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

ஏ.கோவிந்தசாமி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

நேசமணி பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவிப்பு

புதுச்சேரி அரசு சாா்பில் முன்னாள் முதல்வா் வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலைக்கு மரியாதை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



