குளத்தை தூா்வாரக் கோரிக்கை

திருமருகல் ஒன்றியம், அகரக்கொந்தகை ஊராட்சி, கள்ளிக்காட்டு போலகம் வள்ளுவன் குளத்தை தூா்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், அகரக்கொந்தகை ஊராட்சி, கள்ளிக்காட்டு போலகம் வள்ளுவன் குளத்தை தூா்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பகுதியில் சுமாா் 25 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள், இந்த குளத்தை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனா். இக்குளத்தில் சுற்றுச்சுவா் மற்றும் படிக்கட்டுகள் இல்லாததால், முதியவா்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. மேலும், குளத்தைச் சுற்றி கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால், குளத்து நீா் சுகாதாரமற்ற நிலைக்கு மாறிவருவதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, வள்ளுவன் குளத்தை தூா்வாரி, சுற்றுச்சுவா் மற்றும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com