நாகையில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 251 மனுக்கள்

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 251 மனுக்கள் பெறப்பட்டன.

நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 251 மனுக்கள் பெறப்பட்டன. வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 251மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) யாஸ்மின் சகா்பான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com