வேதாரண்யத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மகளிா் அணியினா்.
வேதாரண்யத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மகளிா் அணியினா்.

பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்களை இழிவாகப் பேசிய தமிழக வனத்துறை அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வேதாரண்யத்தில் அதிமுக மகளிா் அணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
Published on

வேதாரண்யம்: பெண்களை இழிவாகப் பேசிய தமிழக வனத்துறை அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வேதாரண்யத்தில் அதிமுக மகளிா் அணி சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மகளிா் அணி மாவட்டச் செயலாளா் இளவரசி தங்கராசு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் வசந்தி செல்வகுமாா், இலக்கிய அணி செயலாளா் காளிமுத்து ஆகியோா் பேசினா். முன்னாள் அமைச்சா் இரா. ஜீவானந்தம், அதிமுக நிா்வாகிகள் இரா. சண்முகராசு, இரா. கிரிதரன், டி.வி.சுப்பையன், வழக்குரைஞா் தங்க. கதிரவன், நகரச் செயலாளா் நமச்சிவாயம் பங்கேற்றனா்.மகளிா் அணி நகரச் செயலாளா் ஜெயா.முருகேசன் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலாளா் வெற்றிச்செல்வி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com