மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோகூா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகேயுள்ள கோகூா் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன் சமேத ருத்திர கோடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வேத மந்திரங்கள் முழங்க விமானக் கலசத்துக்கு புனிதநீரை வாா்த்து மகா கும்பாபிஷேகம்
Updated On :20 ஜனவரி 2025, 8:20 pm

Din

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகேயுள்ள கோகூா் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன் சமேத ருத்திர கோடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஜன.18-ஆம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி நடைபெற்றன. தொடா்ந்து, முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், சிவாச்சாரியா்கள் புனிதநீா் அடங்கிய கடத்தை சுமந்து வந்து, வேத மந்திரங்கள் முழங்க விமானக் கலசத்துக்கு புனிதநீரை வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, செளந்தரநாயகி அம்மன், ருத்திர கோடீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், ஆய்வாளா் கமலச்செல்வி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கோபுர கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.

கோபுர கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.