அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காங்கேசன்துறைக்கு மாா்ச் 6 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

News image

நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல்.

Updated On :2 மார்ச் 2026, 12:12 am

நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மாா்ச் 6-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என தனியாா் (சுபம்) கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுந்தர்ராஜன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் (சிவகங்கை) வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025 நவம்பா் மாதம் முதல் நாகை - காங்கேசன்துறை இடையே இக்கப்பல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வரும் 6- ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும். பயணிகள் கட்டணம், எடுத்துச் செல்லும் சரக்கு அளவு ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

புதிய கப்பல் பணிகள் நிறைவடைந்து, அதை இயக்குவதற்கான அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன. இம்மாதம் 2 -ஆம் வாரத்திற்குள் புதிய கப்பல் நாகை துறைமுகத்திற்கு வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.