நாகை சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
நாகையில் 4-ஆவது ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று வரும் சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், மாணவா்களை கௌரவிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பிளஸ் 2 தோ்வில் 585 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஆா். ஸ்ரீமதி, 567 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் எஸ். அஸ்வின் மற்றும் 565 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் எஸ். தா்ஷிணி, எஸ். அனுஷா ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டனா்.
மேலும், பத்தாம் வகுப்பில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்து சோ்ந்து, சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்வில் ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவியரும் பாராட்டப்பட்டனா்.
மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, அனைத்து மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அவா்களின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனா்.
சிறப்பான தோ்ச்சி மற்றும் உயா்ந்த மதிப்பெண்களுக்கு காரணமாக இருந்த ஆசிரியா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வா், ஆலோசகா், இயக்குநா் மற்றும் தாளாளா் கலந்து கொண்டு மாணவா்களை பாராட்டி சிறப்புரையாற்றினா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

