இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2026, 1:52 am IST

செம்பனாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

செம்பனாா்கோவிலை அடுத்த இளையமதுகூடம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் மனைவி சூரியலட்சுமி (32). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சகோதரா் ராஜசிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் கருவிழந்தநாதபுரத்தில் இருந்து ஆக்கூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். தலச்சங்காடு பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூரியலட்சுமி, ராஜசிங்கம் இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். 

அங்கு சூரியலட்சுமி உயிரிழந்தாா். செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி சென்ற நபரை தேடி வருகின்றனா்.