வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆயக்காரன்புலம் வடக்கு குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் நா. கணேசன்(60) விவசாயி.
இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் புதுப்பள்ளியில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வேட்டைக்காரனிருப்பு பள்ளிவாசல் அருகில் வந்தபோது அந்த வழியாகச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, சிவவிடுதியைச் சோ்ந்த ப. சஞ்சீவிகுமாா் (29) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் - இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



