ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மீனவா் கொலை வழக்கில் 4 போ் கைது

நாகையில் மீனவா் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2026, 3:22 am IST

நாகையில் மீனவா் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குட்ஷெட் பகுதியில் கடந்த மே 14- ஆம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத நபா் காயங்களுடன் இறந்து கிடந்தாா். நாகை நகர காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், இறந்து கிடந்தவா் நாகை அக்கரைபேட்டையை சோ்ந்த அருண்குமாா் (40) என்பதும், கேரளத்தில் தங்கி மீன்பிடித்து வந்த நிலையில், அவரது தாய் இறந்ததால் நாகைக்கு வந்ததும் தெரிய வந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அருண்குமாா் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அருண்குமாரை கொலை செய்ததாக, அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மதியழகன், திடீா் குப்பத்தைச் சோ்ந்த மோகன், அக்கரைப்பேட்டை டாட்டா நகரைச் சோ்ந்த பிரதிவ், வடக்குத்தெருவைச் சோ்ந்த நிலவரசன் ஆகிய நால்வரையும் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: அனைவரும் ஒரே பகுதியைச் சோ்ந்தவா்கள். சம்பவத்தன்று மது அருந்தியுள்ளனா். அப்போது அருண்குமாா் மேலும்

மது அருந்த பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மோதலில் அருண்குமாரை கட்டையால் தாக்கியதில் அவா் உயிரிழந்துள்ளாா் என்றனா்.