காரைக்கால் பெருமாள் கோயிலில் சீர்வரிசை வழிபாடு
காரைக்கால் பெருமாளுக்கு சீர்வரிசை நாணயம் அளித்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் பெருமாளுக்கு சீர்வரிசை நாணயம் அளித்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் தீபாவளி நாளில் சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூலவர் ஸ்ரீ ரங்கநாதர், உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாளுக்கு புதிய வஸ்திரமாக பட்டாடை சாற்றப்பட்டிருந்தது.
பெரியாழ்வார் மகளான ஆண்டாளை மணம் முடித்த ஸ்ரீ ரங்கநாதருக்கு, சீர்வரிசை தரும் நிகழ்ச்சி ஸ்ரீ ரங்கநாதர் சன்னிதியில் நடத்தப்பட்டது. சீர்வரிசையாக 18 மூட்டை நாணயத்தை பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.
சீர்வரிசையில் தரப்பட்ட நாணயங்கள் பக்தர்களுக்கு (பிரசாதமாக) விநியோகிக்கப்பட்டன. உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகளிடமிருந்து பக்தர்கள் நாணயத்தை பெற்றுக்
கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர் கோவில், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...