யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காரைக்காலில் இன்று கண்காணிப்பு: கேமராக்கள் இயக்கிவைக்கும் நிகழ்ச்சி: புதுச்சேரி முதல்வர் பங்கேற்கிறார்

காரைக்காலில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி சனிக்கிழமை (அக். 21) இயக்கிவைக்கவுள்ளார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:08 pm

DIN

காரைக்காலில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி சனிக்கிழமை (அக். 21) இயக்கிவைக்கவுள்ளார்.
காரைக்காலில் ஓ.என்.ஜி.சி. மற்றும் புதுச்சேரி மின் திறல் குழும நிதி ரூ. 87 லட்சத்தில், முக்கியமாக 26 இடங்களில் 2 சுழலும் கேமரா உள்ளிட்ட 53 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்புவோரை அடையாளம் காணவும், வழிப்பறி போன்ற சமூக விரோத குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்காணித்துப் பிடிக்க, கண்காணிப்பு கேமரா உதவும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காரைக்கால் ஆட்சியரகம் அருகேயுள்ள காமராஜர் திடலில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் காவல்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரி காவல்துறைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.