செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

காரைக்கால் பெருமாள் கோயிலில் செப். 2 -இல் கிருஷ்ண ஜயந்தி விழா

காரைக்கால் பெருமாள் கோயில்களில் செப். 2-ஆம் தேதி கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

காரைக்கால் பெருமாள் கோயில்களில் செப். 2-ஆம் தேதி கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.
கிருஷ்ணனின் அவதாரத்தை பெருமாள் கோயில்களில் குழந்தை வடிவிலான கண்ணனாக வைத்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதையொட்டி உறியடி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்  கோயிலில் இவ்வாறான கிருஷ்ண ஜயந்தி விழா செப். 2 -ஆம் தேதி இரவு கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ நர்த்தன கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்புத்  திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
குழந்தை வடிவிலான கண்ணனை, பக்தர்கள் அருகில் சென்று தொட்டு  வழிபாடு செய்யும் நிகழ்வும் நடைபெறுகிறது.
செப். 3-ஆம் தேதி இக்கோயில் நிர்வாகம் சார்பில் உறியடி வழிபாடு நடத்தப்படுகிறது. வீதிகளில் முக்கிய இடங்களில் உறியடிக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, பெருமாள் வீதியுலாவின்போது உறியடிக்கப்படவுள்ளது.
இதேபோன்று  காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ணருக்கும் ஜயந்தி நாளில் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.  நிரவி ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழிவரதராஜ பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, குழந்தை வடிவிலான கண்ணனை தொட்டிலில் சிறப்பு அலங்காரத்தில்  வைத்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும்.
பெருமாள் கோயில்களில் இந்த நிகழ்த்தி விமரிசையாக நடைபெறுவதற்கேற்ப அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.