எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி, காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. அசனா கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு எம்எல்ஏ அசனா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தெற்கு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு எம்எல்ஏ மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் அதிமுகவினர், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









