முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நினைவு நாள்: பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

காரைக்காலில் தந்தை பெரியார் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Updated On :25 டிசம்பர் 2018, 6:06 am IST

காரைக்காலில் தந்தை பெரியார் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதேபோல், அதிமுக சார்பில் எம்எல்ஏ அசனா, மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் பொருளாளர் சங்கர், இலக்கிய அணி செயலாளர் அமுதா ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அரசு. வணங்காமுடி, துணைச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.