காரைக்கால் வானொலியில் பிப்.25-இல் பிரதமர் உரை ஒலிபரப்பு
காரைக்கால் பண்பலையில் வரும் 25-ஆம் தேதி பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.


காரைக்கால் பண்பலையில் வரும் 25-ஆம் தேதி பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
இதுகுறித்து காரைக்கால் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் ஜி.சுவாமிநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றும் மன் கி பாத் என்கிற உரை வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) முற்பகல் 11 மணிக்கு ஒலிபரப்பாகும். அதனைத் தொடர்ந்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் மனதின் குரல் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகும். மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் அன்றிரவு 8 மணிக்கு மறு ஒலிபரப்பாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...