வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பூட்டிய கடை வாயிலில் தகவல் தாள் ஒட்டியதால் பரபரப்பு

குடிமைப் பொருள் வழங்கல் துறை மக்கள் கவனத்துக்கு தெரிவிக்கும் தகவல் தாளை, பூட்டிய கடை வாயிலில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் மக்களுக்கு போய் சேருமா? என பலரும் கேள்வி

Updated On :14 மே 2018, 7:32 pm

குடிமைப் பொருள் வழங்கல் துறை மக்கள் கவனத்துக்கு தெரிவிக்கும் தகவல் தாளை, பூட்டிய கடை வாயிலில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் மக்களுக்கு போய் சேருமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
ரேஷன் பொருள்கள் விநியோகம் இல்லாததால், காரைக்காலில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், மக்களின் கவனத்துக்குச் செல்ல வேண்டிய குடிமைப் பொருள் வழங்கல் துறை தகவல் தாள், கடையின் வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு பெறாதவர்கள், ஆதார் விவரங்களுடன் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தை உடன் அணுகவும் என்று ஒரு தகவலும், இறப்பு, இடமாற்றம், வசிக்கவில்லை போன்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபணை இருப்போர் தகுந்த ஆதாரங்களுடன் அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும். இல்லையெனில், அட்டை ரத்து செய்யப்படும் என மற்றொரு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் வரத்தே இல்லாத கடை வாயிலில் இதுபோன்ற முக்கியத் தகவல் கண்துடைப்பாக ஒட்டப்படுகிறது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை குடிமைப் பொருள் வழங்கல் துறை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.