ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையம் இன்று திறப்பு: முதல்வர் பங்கேற்கிறார்

காரைக்காலில் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையம் செவ்வாய்க்கிழமை ( பிப்.26) பயன்பாட்டுக்கு

Updated On :26 பிப்ரவரி 2019, 1:21 am IST

காரைக்காலில் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையம் செவ்வாய்க்கிழமை ( பிப்.26) பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி பங்கேற்கிறார்.
காரைக்கால் பிள்ளைத் தெருவாசலில் உள்ள துணை மின் நிலையம் ரூ.48 கோடி செலவில் 230 கே.வி. திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, நெய்வேலியிலிருந்து திருவாரூருக்கு சென்று, அங்கிருந்து காரைக்கால் துணை மின் நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த மின்சாரம், இனி நெய்வேலியிலிருந்து நேரடியாக காரைக்கால் துணை மின் நிலையத்தை வந்தடையும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த துணை மின் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மேலும், செருமாவிலங்கையில் புதுச்சேரி அரசின் உயர்கல்வி நிறுவனமான பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரிக்கான கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெறுகிறது.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி விரிவாக்கப் பகுதி ரூ.60 லட்சத்தில் பட்டமேற்படிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் மு.கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம் என பெயர் சூட்டப்பட்டதோடு, மைய வளாகத்தில் கருணாநிதியின் உருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இதனை திறந்துவைக்கும் நிகழ்ச்சி, ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை மூலம் மகளிர் குழுக்களுக்கு ரூ.60 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவையும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, சட்டப் பேரவைத் தலைவர் வி. வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், எம். கந்தசாமி, எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான், ஆர். கமலக்கண்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், அரசு செயலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை
நடத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.