தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

டேக்வோண்டோ பதக்கம் வென்றவருக்கு ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குநர் பாராட்டு

டேக்வோண்டோ தற்காப்புக் கலை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர் மற்றும்  பயிற்சியாளருக்கு ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:44 am IST

டேக்வோண்டோ தற்காப்புக் கலை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர் மற்றும்  பயிற்சியாளருக்கு ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் டேக்வோண்டோ அமைப்பின் சார்பில், காரைக்கால் மாவட்டம், விழுதியூர், ஊழியப்பத்து மற்றும் நாகை மாவட்டம், திருமருகல், திருக்கண்ணபுரம், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டேக்வோண்டோ பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சியில் சுமார் 500 மாணவர்கள் உள்ளனர்.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த டிச. 24 முதல் 27 -ஆம் தேதி வரை தேசிய அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்மணி, ஜெயக்குமார், முன்னாள் மாணவர்கள் தேவநாதன், ஸ்ரீநாகவிக்னேஷ், அஜித், கம்பன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். காளிதாஸ், சந்தோஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பயிற்சி அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு ஓ.என்.ஜி.சி. பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனடிப்படையில், பதக்கம் வென்றதை ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்திடம் தெரிவிக்கும் வகையில், தங்கப் பதக்கம் வென்ற தேவநாதன், பயிற்சியாளர் பாண்டியன் ஆகியோர் ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட் மேலாளரும், நிர்வாக இயக்குநருமான வி.வி. மிஸ்ராவை திங்கள்கிழமை சந்தித்தனர்.
பதக்கம் வென்றவரையும், பயிற்சியாளரையும் அவரும், உடனிருந்த மற்ற அதிகாரிகளும் பாராட்டி வாழ்த்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.