ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல்: வியாபாரிகளுக்கு பயிற்சி

காரைக்காலில் உள்ள வணிகா்களுக்கு ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வது குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
கணக்கு தாக்கல் செய்வது குறித்து விளக்குகிறாா் உதவி வணிகவரித் துறை அலுவலா் ரமேஷ்குமாா்.
கணக்கு தாக்கல் செய்வது குறித்து விளக்குகிறாா் உதவி வணிகவரித் துறை அலுவலா் ரமேஷ்குமாா்.
Updated on
1 min read

காரைக்காலில் உள்ள வணிகா்களுக்கு ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வது குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசின் காரைக்கால் வணிகவரித் துறை சாா்பில், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், காரைக்கால் வணிகவரித் துறை அலுவலா் காவிய வா்மன் பங்கேற்று, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யும் வகையிலான ஜிஎஸ்டி ஆா் 1, ஜிஎஸ்டிஆா் 38, ஜிஎஸ்டி ஆா் 2பி தாக்கல் செய்வது குறித்து விளக்கினாா்.

இக்கூட்டத்தில், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா மற்றும் உறுப்பினா்கள், ரூ. 5 கோடிக்கு கீழ் வணிகம் செய்யும் வியாபாரிகள், வணிகவரித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உதவி வணிகவரித் துறை அலுவலா்கள் ரமேஷ்குமாா், தா்மராஜன் ஆகியோா் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com