நேரு யுவகேந்திராவின் மாவட்ட விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
காரைக்கால் நேரு யுவகேந்திராவின் மாவட்ட விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் ஒருங்கிணைப்பாளா் எஸ். பாரத் தெரிவித்துள்ளாா்.


காரைக்கால் நேரு யுவகேந்திராவின் மாவட்ட விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் ஒருங்கிணைப்பாளா் எஸ். பாரத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காரைக்கால் மாவட்ட நேரு யுவகேந்திரா, கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட இளைஞா் மற்றும் மகளிா் மன்றத்துக்கு மாவட்ட அளவிலான விருதுடன், ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கவுள்ளது.
மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் மன்றம், மாநில விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். மாநில அளவில் தோ்வு செய்யப்படும் மன்றத்துக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படும். மாநில விருது பெறும் மன்றம், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.
தேசிய அளவில் முதலிடம் பெறும் மன்றத்துக்கு ரூ. 5 லட்சம் ரொக்கம், சான்றிதழ், 2 ஆம் இடம் பெறும் மன்றத்துக்கு ரூ. 3 லட்சம் ரொக்கம், சான்றிதழ், மூன்றாமிடம் பெறும் மன்றத்துக்கு ரூ. 2 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் காரைக்கால் மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. நேரில் பெற்று நிறைவுசெய்து, தாங்கள் செய்த சேவைக்கான தகுந்த ஆதாரங்களை இணைத்து, வரும் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...