

காரைக்கால் அருகேயுள்ள ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வரும் பிப். 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் என்ற பழைமையான கோயில் உள்ளது. ராகு-கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் ரூ. 60 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.
இதைத்தொடா்ந்து, 2021, பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 7.20 மணியளவில் கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, சிவலிங்கம், அம்பாள் தவிா்த்து, விநாயகா், முருகன், ராகு-கேது என 20 சாமி சிலைகள் குடமுழுக்குக்கு முன்பு மருந்து சாற்றி சந்நிதிகளில் நிறுவப்படவுள்ளன.
புதிதாக செய்யப்பட்ட கல் சிலைகளை ஆகம விதிகளின்படி, குடமுழுக்குக்கு முன்பு ஒரு மண்டலத்துக்கு தண்ணீரினுள் வைத்திருக்க வேண்டும். அதன்படி, சிவாச்சாரியா்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் தண்ணீா் நிரப்பி, சாமி சிலைகளை வியாழக்கிழமை அதனுள் வைத்தனா்.
இதற்கு தினமும் சிவாச்சாரியா்களால் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இந்நிகழ்வில், பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.