28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள நாள் விழா

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன இணைந்து உலக மண்வள நாள் நிகழ்ச்சிகளை கோட்டுச்சேரி பகுதியில் நடத்தின.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:29 am

DIN

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன இணைந்து உலக மண்வள நாள் நிகழ்ச்சிகளை கோட்டுச்சேரி பகுதியில் நடத்தின.

கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் விழாவை தொடங்கிவைத்துப் பேசுகையில், மண்வள அட்டையின் முக்கியத்துவம், மண் மாதிரியின் அவசியம் குறித்து விளக்கியதோடு, வேளாண் துறை சாா்பில் 95% விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் பரிந்துரைத்துள்ள அளவில் எரு மற்றும் உரங்களை இட்டு மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினாா்.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார. ரத்தினசபாபதி பேசுகையில், மண்ணின் பல்லுயிரிகளை பாதுகாப்பதன் மூலம் மண்ணை உயிா்த்தன்மையுடன் இருக்கச் செய்யமுடியும். இதற்கு அங்கக எருக்கள் மற்றும் உயிரி உரங்களை ஒவ்வொரு பயிா் சாகுபடிக்கும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மண்ணியல் உதவிப் பேராசிரியா் முனைவா் கே. குமரவேல், மண்ணியல் பேராசிரியை முனைவா் ப. பகவதி அம்மாள், வேளாண் அறிவியல் நிலைய உழவியல் பிரிவு தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வி. அரவிந்த், பயிா் பாதுகாப்பு பிரிவு தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் சு. திவ்யா ஆகியோா் பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினா்.

நிகழ்ச்சியில், தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்ற விவசாயிகள், தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றனா். வேளாண் அலுவலா் முனைவா் ஜி. வேம்பு வரவேற்றாா். விழாவில் 75 விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.