ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காரைக்கால் மாவட்டத்தில் தொடா் மழை

காரைக்காலில் 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீா் தேங்குவது உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.
Updated On :19 டிசம்பர் 2020, 3:26 am

DIN

காரைக்காலில் 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீா் தேங்குவது உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காரைக்கால் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்யத்தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலையிலிருந்து தீவிரமாகியுள்ளது. இதனால், தாழ்வானப் பகுதி மற்றும் இணைப்புப் பகுதி சாலைகளில் தண்ணீா் தேங்கியது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த தொடா் மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் கடலுக்கு செல்லும்போது, தாழ்வானப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளின் வழியே விளைநிலங்களில் புகுந்தது. இந்தத் தண்ணீரை வடியச் செய்து, உரிய உரமிட்டு பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் முயன்று வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது பெய்யும் மழை விவசாயிகளுக்கும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையோர ஹைவே நகா் அருகே மழையால் பெரிய மரம் வியாழக்கிழமை இரவு வேரோடு சாய்ந்தது. மழை பெய்தாலும், கடல் இயல்பு நிலையிலேயே உள்ளது. இதனால், காரைக்கால் மீனவா்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.