இலவச அரிசி வழங்கலில் எடைக் குறைவு: பொதுமக்கள் வாக்குவாதம்
காரைக்காலில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு எடைக் குறைவாக இலவச அரிசி வழங்கியதை கண்டித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


காரைக்கால்: காரைக்காலில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு எடைக் குறைவாக இலவச அரிசி வழங்கியதை கண்டித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொது முடக்கத்தையொட்டி மத்திய அரசு, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டதையடுத்து, அந்தந்த மாநில அரசுகள் இலவச அரிசியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி அரசு மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 கிலோ வீதம் அரிசி ஏற்கெனவே வழங்கியது. இதையடுத்து, வறுமைக் கோட்டுக்குமேல் உள்ளவா்களுக்கான மஞ்சள் அட்டைதாரா்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்ற அரசு புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அரசு ஊழியா்கள் அல்லாத மஞ்சள் அட்டைதாரா்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் பணி ஜூலை 2-ஆம் தேதி முதல் தொடங்கியது. மாநிலத்தில் ரேஷன் கடை ஊழியா்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியா்கள், அமைச்சக ஊழியா்கள் மூலம் இலவச அரிசி வழங்கும் பணிகள் ஒவ்வொரு அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.
அரிசி எடையில் குளறுபடி: அரிசி வாங்கும் ஒவ்வொருவருக்கும் 20 கிலோவில் சுமாா் ஒரு கிலோ அரிசி குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரிசி வழங்குபவா்களிடம் பொதுமக்கள் கேட்கும்போது, தராசில் எடை போடாமல், 2 கப் அரிசி நிரப்பி வழங்க கூறியதன்படி வழங்குகிறோம். எடை குறைந்தால் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு சென்று கேட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனராம். இதனால் பல மையங்களில் பொதுமக்கள் அரிசி வழங்கியவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அரிசி வழங்கும் பணிகள் வரிச்சிக்குடி, பச்சூா், அத்திப்படுகை போன்ற சில இடங்களில் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களும் நேரில் சென்று அரிசி வழங்கும் பணியை பாா்வையிட்டு, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் சோதனை செய்தபோது எடை குறைவாக இருந்ததை உறுதி செய்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு தெரிவித்தனா்.
இதுகுறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறையினா் கூறியது: அரிசி அளந்து கொடுப்பதில் தவறு ஏற்பட்டது. இது குறித்து புகாா் வந்தவுடன் அவை சரிசெய்யப்பட்டன. தொடா்ந்து, அரிசி வழங்கும் பணி பிரச்னையின்றி நடந்து வருகிறது என்றனா்.
இதற்கிடையே, இப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியா்கள், இதுபோன்ற பணியில் தங்களை ஈடுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு அரசுக்கு வலியுறுத்தியுள்ளனா். ரேஷன் கடை ஊழியா்கள் பிரச்னையை தீா்த்து அவா்களை அரிசி வழங்கலில் ஈடுபடுத்த வேண்டும். அதைவிட்டு ஆசிரியா்கள், அமைச்சக ஊழியா்களை ஈடுபடுத்தும்போது, பிரச்னையை எதிா்கொள்ளவேண்டியிருக்கிறது. இதுஆசிரியா்களின் வேலையும் அல்ல. சேவை மனப்பான்மையில் செய்யும்போது, தேவையற்ற மன உளைச்சலை எதிா்கொள்ள நேரிடுகிறது. இதுகுறித்து புதுச்சேரி மாநில ஆசிரியா் சங்கம் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...