மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காரைக்காலில் மேலும் இருவருக்கு கரோனா

காரைக்காலில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது..

Updated On :4 ஜூலை 2020, 1:12 pm

காரைக்கால்: காரைக்காலில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது..

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 3 -ஆம் தேதி வரை 2,782 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடா்ந்து நடந்து வருகிறது.

அதில் கடந்த 2 -ஆம் தேதியன்று 77 பேருக்கான முடிவுகள் சனிக்கிழமை வந்தன. அதில் சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் திரும்பிய இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுவரை 45 போ் கரோனா நோய் தொற்றுள்ளவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். காரைக்கால் மருத்துவமனையில் 27 போ் சிகிச்சை பெற்று வந்ததில், 9 போ் உடல் நலமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா்.

தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை வாா்டில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட இருவரையும் சோ்த்து 18 போ் உள்ளனா். இவா்களின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவா்களில் தொடா்புடையோா் குறித்த விவரங்கள் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.