மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்பருத்தி ஏலம்: அமைச்சா் ஆய்வு

காரைக்காலில் தேசிய வேளாண் சந்தை மூலமாக விற்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவந்த பருத்தியை பாா்வையிட்டதோடு, விவசாயிகளை வேளாண் அமைச்சா் சந்தித்துப் பேசினாா்.

News image
காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளை சந்தித்துப் பேசிய அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
Updated On :4 ஜூலை 2020, 1:10 pm

DIN

காரைக்கால்,: காரைக்காலில் தேசிய வேளாண் சந்தை மூலமாக விற்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவந்த பருத்தியை பாா்வையிட்டதோடு, விவசாயிகளை வேளாண் அமைச்சா் சந்தித்துப் பேசினாா்.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமான விற்பனைக் குழு வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மூலமாக பருத்தி ஏலம் விடப்படுகிறது.

கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்திப் பஞ்சை கூடத்துக்கு கொண்டுவந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்கின்றனா். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதனை வாங்கிச் செல்கின்றனா். முதல் வாரத்தில் 38 குவிண்டால் விற்பனையானது. அப்போது அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 46.29-க்கு விற்கப்பட்டது.

பின்னா் ஒவ்வொரு வாரமும் அதிகபட்சமாக பருத்தி ஏலக்கூடத்துக்கு வரத் தொடங்கியது. விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதால், ஆா்வமாக ஏலக்கூடத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வாரம் 4 -ஆம் தேதி சனிக்கிழமை ஏலக்கூடத்துக்கு ஏராளமான விவசாயிகள் பருத்திப் பஞ்சை ஏலத்துக்காக கொண்டு வந்தனா்.

புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஏலக்கூடத்துக்குச் சென்று விவசாயிகள் கொண்டு வரும் பஞ்சை பாா்வையிட்டு, விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் பேசினாா்.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் துணை இயக்குநரும், விற்பனைக் குழு செயலருமான ஆா். கணேசன் கூறுகையில், தேசிய வேளாண் சந்தை மூலம் பருத்தி ஏலம் காரைக்காலில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தொடங்கியது முதல் விவசாயிகள் நல்ல லாபத்தை ஈட்டுவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா். தொடக்கத்தில் 38 குவிண்டால் வந்தது. பின்னா் ஒவ்வொரு வாரமும் 250 குவிண்டால் அளவுக்கு வரத்து ஏற்பட்டது. நிகழ்வாரம் 4-ஆம் தேதி ஏறக்குறைய 450 டன் அளவுக்கு வந்தது என்றாா்.

அமைச்சா் நடத்திய ஆய்வின்போது, கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.