காரைக்காலில் மேலும் 12 பேருக்கு கரோனா
காரைக்காலில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) புதன்கிழமை தெரிவித்தாா்.


காரைக்கால்: காரைக்காலில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 3772 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி மட்டும் 197 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதன் முடிவுகள் புதன்கிழமை வந்ததில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சேத்தூா் பகுதியில் 2, கோட்டப்பாடியில் 1, தென்னங்குடியில் 1, அம்மன்கோயில்பத்து 1, காரைக்கால் காமராஜா் சாலையில் 2, காரைக்கால் திருநள்ளாறு சாலையில் 4, குளூனி மருத்துவமனை ஊழியா் 1 என 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை 111 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரை 42 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் சென்னையிலும், ஒருவா் திருவாரூரிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். 2 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 65 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களது உடல் நிலை சீராக உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...