கரோனா தடுப்புப் பணியில் புதுவை அரசு செயலிழப்புஅதிமுக குற்றச்சாட்டு
புதுவையில் கரோனா தடுப்புப் பணியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு செயலிழந்துவிட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.


புதுச்சேரி: புதுவையில் கரோனா தடுப்புப் பணியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு செயலிழந்துவிட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து, அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 35 மாவட்டங்களில் சிறிய மாவட்டமான புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. தேசிய இறப்பு விகிதம் 1.72 சதவீதமே உள்ள நிலையில், புதுவையில் இறப்பு விகிதம் 1.83-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தடுப்புப் பணிகளில் சரியான திட்டமிடல் இல்லாத ஆளும் காங்கிரஸ் அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.
கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பரிசோதனைகளை அதிகப்படுத்தி ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சையளிக்க அரசு தவறிவிட்டது. 3 மடங்கு நோயாளிகள் வீடுகளிலேயே தங்கியுள்ள மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவா்கள் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். நோயின் தாக்கம் அதிகமாகி, பின்னா் மருத்துவமனைகளில் சோ்க்கப்படுகின்றனா். இதனால், நோயாளிகள் பலா் பலியாகி வருகின்றனா். அரசின் அலட்சியத்தால், கரோனா உயிரிழப்பு தொடா்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...