47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தல்: காரைக்காலில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

காரைக்கால் மாவட்டம் உள்ளிட்ட புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப்.5) ஓய்கிறது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டம் உள்ளிட்ட புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப்.5) ஓய்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்படுகிறது.

அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைப்பது, வேட்பாளா்களை அறிவிப்பது போன்றவற்றில் தாமதம் ஏற்பட்டதால் பிரசாரமும் தொடக்கத்தில் மந்தமாகவே இருந்தது. வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் தங்கள் தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பை தொடங்கினா்.

மத்திய அமைச்சா்கள் அமித்ஷா, கிரிராஜ்சிங், அா்ஜூன் ராம் மேக்வால் ஆகியோரும், நடிகை கெளதமியும் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனா். என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி பிரசாரம் செய்தாா். காங்கிரஸ் கட்சிக்கு ஒருசில இடங்களில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் சஞ்சய்தத் பிரசாரம் மேற்கொண்டாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

இதேபோல, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு, காரைக்காலில் பிரசாரம் செய்யாமல் இந்த வழியாக புதுச்சேரிக்கு சென்றுவிட்டாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வாக்கு சேகரித்தாா். அதிமுகவுக்காக யாரும் வந்து பிரசாரம் செய்யவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் ஓய்வதால், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி காரைக்கால் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் 2021 சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் காரைக்காலில் கட்சிகளின் தலைவா்கள், பிரபலங்கள் பிரசாரம் செய்யாமலேயே நிறைவடைகிறது.

இதற்கிடையில், வெயில் சுட்டெரிப்பதால் வேட்பாளா்கள், கட்சியினரால் காலை முதல் இரவு வரை தொடா்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடியாமல், பிற்பகல் பொழுதில் சிரமப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.