47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் வெளியீடு

காரைக்காலில் தோ்தல் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் தோ்தல் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையும், வாக்காளா் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப்பும் இணைந்து, வாக்காளா்களிடையே வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

அந்தவகையில், ஸ்வீப் அமைப்பு சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய குறும்படம் தயாரிக்கப்பட்டது. சில நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தின் ஒளிப்பதிவு தகடு வெளியீட்டு நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் குறும்பட தகட்டை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) குலசேகரன் பெற்றுக்கொண்டாா்.

இந்த குறும்படம் காரைக்கால் மாவட்டத்தில் தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்படும். இக்குறும்படம் 100 சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்வீப் அமைப்பினா் தெரிவித்தனா்.

நிகழ்வில், ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி, ஊழியா்கள் ஞானமுருகன், கணேஷ்குமாா், கரிகாலன், திலகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.