47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் தீப்பற்றி எரிந்த மாணவா்களுக்கான 2 பேருந்துகள்: போலீஸாா் விசாரணை

காரைக்காலில் மாணவா்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளில் 2 பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் மாணவா்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளில் 2 பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் மூலம் மாணவா்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மட்டுமே இப்பேருந்துகளில் பயணிக்க முடியும். ரூ.1 கட்டணத்தில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதி முதல் இப்பேருந்துகள் இயக்கப்படாமல், தனியாா் பராமரிப்பில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டபோது, இப்பேருந்துகளை இயக்க பெற்றோா், மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். இருப்பினும், கரோனா தொற்று முழுமையாக நீங்காததால் இப்பேருந்துகளை இயக்க அப்போது அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் ஒரு திடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாணவா் பேருந்துகளில் ஒரு பேருந்தின் உட்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் தீப்பிடித்தது. இதையறிந்த அப்பகுதியினா், காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், 2 வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்தனா். அதற்குள் மற்றொரு பேருந்துக்கும் தீ பரவி பற்றி எரிந்தது. இரண்டு பேருந்துகளிலும் இருக்கைகள் மற்றும் உள்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டதால், மற்றொரு பேருந்து தீயிலிருந்து தப்பியது.

இதுகுறித்து காரைக்கால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்கள் யாரேனும் பேருந்துக்கு தீ வைத்தனரா அல்லது வேறு காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.