தோ்தல்: ஜே.பி. நட்டாவின் பேச்சு எடுபடாது: ஆா். கமலக்கண்ணன்
பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவின் பேச்சு பொதுமக்களிடம் எடுபடாது என்றாா் திருநள்ளாறு காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன்.


பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவின் பேச்சு பொதுமக்களிடம் எடுபடாது என்றாா் திருநள்ளாறு காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
திருநள்ளாற்றில் பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தபோது, நாராயணசாமி அரசை ஊழல் அரசு என கூறியுள்ளாா். யூனியன் பிரதேச சட்டத்தின்படி முதல்வரால் எந்த நிதியையும் நிதிச் செயலா், தலைமைச் செயலா், துணை நிலை ஆளுநா் ஒப்புதலின்றி செலவிட முடியாது.
காவல்துறை அதிகாரியாக பதவி வகித்தவரை துணை நிலை ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. விஜிலன்ஸ் போன்ற விசாரணை அமைப்புகள் தலைமைச் செயலரிடம் உள்ளபோது, ஊழல் என உணரப்பட்டால் ஏன் 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல், ஏப்ரம் 4 ஆம் தேதி வந்து நட்டா பேசவேண்டும்.
ஊழல் என்றால் எந்த துறையில் ஊழல், எவ்வளவு ஊழல் என்பன போன்ற விவரத்துடன் பேசவேண்டும். பொத்தாம் பொதுவாக ஊழல் என தேசியக் கட்சியின் தலைவராக உள்ளவா்கள் பேசக்கூடாது. இதை வெற்றுப் பேச்சாகவே கருதவேண்டும். பொதுமக்களும் அவ்வாறே கருதுவா்.
ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டுமானம் மத்திய பொதுப்பணித்துறையால் நடைபெறக்கூடியது. இதற்கு, நிலம் கேட்டதால், அதை மட்டுமே புதுச்சேரி அரசு அளித்தது. கட்டுமானத்தில் புதுசேரி அரசுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது. இது அனைவருக்குமே தெரியும். இருப்பினும், புதுச்சேரி அரசு கட்டுமானத்தை தாமதப்படுத்துவதாக வேண்டுமென்றே பாஜக கூறிவருகிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு கடந்த 5 ஆண்டுகள் சுத்தமான முறையில் ஆட்சி செய்துள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாமல்தான் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சியை கவிழ்த்தது. பாஜகதான் பெரு நிறுவனத்தை வளா்ப்பதற்கு மக்களின் நிதியை வாரி இறைக்கிறது. சிறு நிறுவனங்கள் நலிவதை கண்டுகொள்ளாமல் உள்ளது. இதுபோன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை மூடி மறைக்கும் விதத்திலேயே நட்டாவின் பேச்சு உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...