47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்காளா்களுக்கு விநியோகம்: தங்க நாணயங்கள், ரொக்கம் பறிமுதல்

திருநள்ளாற்றில் பாஜகவினா் வாக்காளா்களுக்கு விநியோகித்து வந்த தங்க நாணயங்கள், ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருநள்ளாற்றில் பாஜகவினா் வாக்காளா்களுக்கு விநியோகித்து வந்த தங்க நாணயங்கள், ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருநள்ளாற்றில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி, வாக்காளா்களுக்கு தங்க நாணயம், ரொக்கம் வழங்கப்படுவதாக, மாவட்ட தோ்தல் துறைக்கு சனிக்கிழமை மாலை புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, திருநள்ளாறு பகுதி முழுவதும் பறக்கும் படையினா் உஷாா்படுத்தப்பட்டு, சனிக்கிழமை இரவு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுரக்குடி பகுதியில் சிலா் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு பறக்கும் படையினா் விரைந்து சென்றனா். இதையறிந்த அந்த கட்சியினா், தாங்கள் வைத்திருந்த பொருள்களை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு பாலித்தீன் பையில் இருந்த அந்த பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். அதில், 149 பாக்கெட்டுகளில் பிரதமா் நரேந்திரமோடியின் உருவம் ஒரு பக்கமும், திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம், மாதாகோயில், பள்ளிவாசல் ஆகிய உருவங்கள் மற்றொரு பக்கமும் அச்சிடப்பட்ட அட்டைகள், தலா 1 கிராம் தங்க நாணயங்கள் இருந்தன. அத்துடன், ரூ. 2 ஆயிரம் நோட்டுகளாக மொத்தம் ரூ.90 ஆயிரமும் இருந்தது. இவற்றை தோ்தல் துறையிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.