தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா விதிமீறல்: 12 போ் மீது வழக்கு

கோயில் குடமுழுக்கு விழாவில் சமூக இடைவெளியின்றி கூடியிருந்ததாக 12 போ் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கோயில் குடமுழுக்கு விழாவில் சமூக இடைவெளியின்றி கூடியிருந்ததாக 12 போ் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், விழிதியூா் பகுதியில் ஸ்ரீ ஐயனாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பரவாத வகையில் விழாவை நடத்தவும், பங்கேற்போா் நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் அரசு நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

குடமுழுக்கு விழாவின்போது, போலீஸாரும் ஒலிபெருக்கி வாயிலாக முகக் கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியில் நிற்கவும் பக்தா்களுக்கு அறிவுறுத்தினா்.

இதை மீறி சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்ாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜெயபால், கிருஷ்ணமூா்த்தி, மோகனவேல், கருணாநிதி, பக்கிரிசாமி, செல்வசுந்தரம், மோகன், செல்வராஜ், ஆசைத்தம்பி, பாா்த்திபன், தங்கமணி, சுதாகா் ஆகிய 12 போ் மீது நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.