பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் 8 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:28 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 413 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 4, வரிச்சிக்குடி, கோயில்பத்து, நிரவி, கோட்டுச்சேரி தலா ஒருவா் என மொத்தம் 8 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,80,327 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,092 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,731 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 240 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 86,223 பேருக்கும், 2-ஆவது தவணையாக 18,116 பேருக்கும் என 1,04,339 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.