காரைக்காலில் 10 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 505 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 6, காரைக்கால்மேடு, திருநள்ளாறு, கோயில்பத்து, வரிச்சிக்குடி தலா 1 என மொத்தம் 10 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,82,917 பரிசோதனை செய்யப்பட்டதில் 15,172 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,809 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 240 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 91,622 பேருக்கும், 2-ஆவது தவணையாக 18,704 பேருக்கும் என 1,10,326 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...