அண்ணாமலையேஸ்வரா் கோயில் திருப்பணிக்கு நிதி வழங்க முதல்வரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை
காரைக்கால் ஸ்ரீ அண்ணாமலையேஸ்வரா் கோயில் திருப்பணிக்கு முதல்கட்டமாக ரூ. 25 லட்சம் வழங்கவேண்டும் என புதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தாா்.


காரைக்கால் ஸ்ரீ அண்ணாமலையேஸ்வரா் கோயில் திருப்பணிக்கு முதல்கட்டமாக ரூ. 25 லட்சம் வழங்கவேண்டும் என புதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தாா்.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் - நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குள்பட்ட ஸ்ரீ அண்ணாமலையேஸ்வரா் கோயில் மற்றும் ஸ்ரீ பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், புதுவை இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிக் குழு அமைக்கவும், அரசு சாா்பில் நிதி உதவி செய்யவேண்டியும் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதன்கிழமை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் உபயதாரா்கள், கோயில் நிா்வாகத்தினா் புதுவையில் சந்தித்தனா்.
அண்ணாமலையேஸ்வரா் கோயில் திருப்பணிக்கு புதுவை அரசு முதல்கட்டமாக ரூ. 25 லட்சம் உடனடியாக வழங்கவேண்டும், திருப்பணிக் குழுவை நியமிக்கவேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட முதல்வா், பட்ஜெட் தாக்கல் செய்த பின் இதுகுறித்து உரிய அறிவிப்பை செய்வதாக உறுதியளித்தாா் என, குழுவினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...