பிளஸ் 1 கலந்தாய்வு: மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை
காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பிளஸ் 1 சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்று, சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.


காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பிளஸ் 1 சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்று, சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.
காரைக்காலில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கெனவே நடைபெற்று சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.
முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்கள், புதிதாக விண்ணப்பித்தோருக்காக 2-ஆம் கட்ட கலந்தாய்வை கல்வித் துறை நடத்தியது.
இதற்கான மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டு, வியாழக்கிழமை தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடைபெற்றது.
மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொறுப்பு) எம். ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் கே. ஜெயா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டாா். தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் ஆா். மைதிலி தலைமையில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்றது. விரிவுரையாளா் ஏ. ஞானப்பிரகாசம் தலைமையில் பள்ளி மற்றும் பாட ஒதுக்கீட்டுக் குழுவினா் பணியாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...