பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் இன்று தடுப்பூசித் திருவிழா தொடக்கம்

காரைக்காலில் 2 நாள்கள் நடைபெறும் தடுப்பூசி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 13) தொடங்குகிறது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:51 pm

DIN

காரைக்காலில் 2 நாள்கள் நடைபெறும் தடுப்பூசி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 13) தொடங்குகிறது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் கூறியது : புதுவையில் சுதந்திர தினத்துக்குள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சூழலை உருவாக்கும் வகையில் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

அந்த வகையில், காரைக்கால் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாள்கள் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட சமுதாய நலவழி மையம், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை என 14 மையங்களில் தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது.

இது காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதோடு அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குள்பட்ட இடங்களுக்கு வாகனத்தில் மருத்துவக் குழுவினா் சென்று வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளனா்.

இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், 2-ஆவது தடுப்பூசி செலுத்துபவா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.