காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. கரோனா பரவல் காலமாக உள்ளதால், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்த காரைக்கால் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தேசியக் கொடி ஏற்றிவைக்கிறாா்.
கடந்த 10 நாள்களாக காரைக்கால் கடற்கரை சாலையில் போலீஸாா் அணிவகுப்புக்கான பயிற்சியில் ஈடுபட்டுவந்தனா். பயிற்சி நிறைடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.
கொடியேற்றுதல், போலீஸாா் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ஒத்திகையாக நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) கே. குலசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...