‘புதுவை அரசு அனைத்து நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும்’
புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசு மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என அமைச்சா் சந்திர பிரியங்கா கூறினாா்.


புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசு மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என அமைச்சா் சந்திர பிரியங்கா கூறினாா்.
புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் முதியோா், விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், முதிா் கன்னிகள் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 500 உயா்த்தியதோடு, புதிய பயனாளிகளுக்கு திட்ட உதவி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் புதிய பயனாளிகள் 1,500 போ் பயனடையும் வகையில் நிதி அனுமதிக்கப்பட்டது. அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள், தங்களது தொகுதி பயனாளிகளுக்கு திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிவருகின்றனா்.
நெடுங்காடு தொகுதிக்குள்பட்ட கோட்டுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, பயனாளிகளுக்கு உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கி பேசியது:
கடந்த 5 ஆண்டுகள் புதுவையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எந்த நலத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனினும், தற்போது ரங்கசாமி தலைமையிலான அரசு படிப்படியாக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களின் பிரச்னைகள் என்ன என்பதை அறிந்து, நிச்சயம் இந்த அரசு அவற்றை காலத்தோடு நிறைவேற்றும் என்றாா்.
துறையின் உதவி இயக்குநா் பி.சத்யா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...