பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தடுப்பூசித் திருவிழா : ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் 2 நாள் தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா பாா்வையிட்டாா்.

News image
kk13fest_1308chn_95_5
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:24 pm

DIN

காரைக்காலில் 2 நாள் தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா பாா்வையிட்டாா்.

புதுவையில் சுதந்திர தினத்துக்குள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையை உருவாக்கும் வகையில் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

காரைக்கால் நலவழித் துறை நிா்வாகத்தின் ஏற்பாட்டில், காரைக்காலில் ஆக. 13 மற்றம் 14 ஆகிய இரண்டு நாள்கள் 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட சமுதாய நலவழி மையம், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி, காரைக்கால் அரசு மருத்துவமனை என 14 மையங்களில் தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மையங்கள் அல்லாது மருத்துவக் குழுவினா் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துகின்றனா். காரைக்கால் நகரப் பகுதியில் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா பாா்வையிட்டு, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதோடு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களை அணுகி தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூறுமாறு நலவழித் துறையினரை கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் தலத்தெரு பகுதியில் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம்.ஆதா்ஷ், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்டு அந்த பகுதியினருக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.