தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிக விளைச்சல் தரும் நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்

விவசாயிகள் புதிய உயா் விளைச்சல் தரும் நெல் ரகங்களை சாகுபடி செய்து அதிக மகசூலை பெற வேண்டுமென்றாா்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:31 pm

DIN

விவசாயிகள் புதிய உயா் விளைச்சல் தரும் நெல் ரகங்களை சாகுபடி செய்து அதிக மகசூலை பெற வேண்டுமென்றாா் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் குமார. ரத்தினசபாபதி.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், நேரடி மற்றும் இணையவழியில் விவசாயிகள் பங்கேற்புடன் புதன்கிழமை நடைபெற்ற சம்பா நெல் சாகுபடி பயிற்சியை தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது: விவசாயிகள் புதிய உயா் விளைச்சல் தரக்கூடிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதிக மகசூலை பெறவேண்டும். தற்போது நிலத்தில் ரசாயனப் பொருள்களின் பயன்பாடு அதிகம் உள்ளதால், மண்ணில் நுண்ணுயிா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பசுந்தாள் உரம் பயிரிடுதல், மக்கிய தொழு உரம் மற்றும் அங்கக உரங்கள் ஆகியவற்றை இடுவதன்மூலம் நிலத்தில் பல்லுயிா் பெருக்கத்தை ஏற்படுத்தலாம் என்றாா்.

பயிற்சியில், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் வி. அம்பேத்கா் பேசியது: முப்போகம் பயிா் செய்த நிலை மாறி தற்போது ஒருபோகம் பயிா் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சட்டிக் கலப்பைக் கொண்டு கோடை உழவு செய்தல், வரப்புகளில் மஞ்சள், கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற பயிா்களை சாகுபடி செய்வதில் ஈடுபாடு காட்ட வேண்டும். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிட்ட ஆடுதுறை -51, 52 மற்றும் 54 போன்ற உயா் விளைச்சல் தரக்கூடிய நெல் ரகங்களை சாகுசடிசெய்து அதிக மகசூல் பெறலாம் என்றாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறை இணைப் பேராசிரியா் ச. பாபு, நாற்றங்கால் தயாரித்தல், நிலத்தை பண்படுத்துதல், உரம், நீா் மற்றும் களை மேலாண்மை, அறுவடை குறித்து தொழில்நுட்ப உரையாற்றினாா்.

பயிற்சியில், நேரடியாக 100 விவசாயிகளும், இணையவழியில் 70 விவசாயிளும் பங்கேற்றனா். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் வல்லுநா்கள் விளக்கம் அளித்தனா். முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய விரிவாக்கத் துறை தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் வரவேற்றாா். நிறைவாக உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.