தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாக்காளா் பட்டியல் திருத்தும்பணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

காரைக்காலில் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் திருத்தும்பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:30 pm

DIN

காரைக்காலில் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் திருத்தும்பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளை தகுதி நாளாகக்கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தும் பணி வரும் நவ.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக.26-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.